அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் பணி நீக்கம்!

Wednesday, September 11th, 2019


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட வந்த ஜோன் போல்டனை அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜோன் போல்டன் ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்  டிரம்ப் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்துள்ளார்.

இதுதவிர அந்த நாடுகளுடன் அமெரிக்கா யுத்தம் நடத்த வேண்டும் என்ற கொள்கையை அடிக்கடி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜேர்ன் போல்டனின் இத்தகைய செயற்பாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் டொனால் ட்ரம்பிக்கிற்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts: