ஜி20 உச்சிமாநாட்டிற்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்!

Friday, July 7th, 2017

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஆரம்பமாகவுள்ள ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஜி 20 நாடுகளின் வர்த்தக பொருளாதார கொள்கைகளிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகள் உட்பட பல உலக தலைவர்கள் ஜேர்மனி சென்றுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ் ஆர்ப்பாட்டங்களில் ஜேர்மனியின் காவல்துறையை சேர்ந்த 76 பேரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜி 20 நாடுகளின் தலைவர்களை நரகம் வரவேற்கின்றது என்ற பேரணியில் கலந்துகொண்ட 12000ற்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டவேளையே இந்த மோதல் வெடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் வீதிகளில் தங்கியுள்ளதாகவும் ஏனைய நகரங்களிற்கும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: