ஹோட்டலில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்கள்!
Monday, January 28th, 2019
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு பரிமாறுகிறது.
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டிலுள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர் சொல்லும் உணவு வகைகளை பரிமாறுகிறது.
ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவதுடன், அவர்களுடன் உரையாடுகிறது மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.
இதனால் ஹோட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ரோபோக்களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது.
அதற்கு பதில் வழங்கிய ஹோட்டல் நிர்வாகம் பணிபுரியும் ‘ரோபோ’க்களை இயக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
Related posts:
|
|
|


