ஹெரோய்னுடன் 7 பேர் கைது!
Thursday, February 2nd, 2017
ஆறு கோடி இந்திய ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் செய்யப்பட்டுள்ளனர் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த 6 கிலோகிராம் ஹெரோய்னும் சந்தேகநபர்களிடமிருந்து இந்திய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி வேம்பார் தொடக்கம் திரேஸ்புரம் வரையான கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர சுற்றிவளைப்பின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகிலிருந்த மூன்று இந்திய பிரஜைகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹெரோய்னை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையர்கள் நடுக்கடலில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போல, குறித்த படகில் வருகை தந்த சுங்க அதிகாரிகள் நடுக்கடலில் காத்திருந்த 04 இலங்கையர்களையும் கைது செய்ததாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


