ஹஜ் யாத்திரையை ஈரான் புறக்கணிப்பு!
Saturday, September 10th, 2016
இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை நேற்று (09) ஆரம்பமாகியது.
புனித நகரங்களான மக்கா மதினாவை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களில் பலர் ஈரானியர்கள்.
சவுதி அரேபிய அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான், இந்த ஆண்டு தன் நாட்டைச்சேர்ந்த யாரையும் மக்காவுக்கு செல்ல அனுமதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வடகொரிய முதற்பெண்மணியை காணவில்லையாம்?
பிரெக்சிட் உடன்படிக்கை - மூன்றாவது வாக்கெடுப்பும் தோல்வி!
சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
|
|
|


