வடகொரிய முதற்பெண்மணியை காணவில்லையாம்?

Thursday, November 3rd, 2016

வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உங்  கின்  மனைவி ரியோ சோல்  யு  கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றாததால் அவருக்கு ஏதும் நிகழ்த்திருக்குமோ என்று தென் கொரிய மற்றும் மேற்குலக ஊடகங்களில் பரவலாக சந்தேகம் கிளப்பட்டுள்ளது.

கடைசியாக அவர் கமரா முன் போஸ் கொடுத்து 7 மாதங்கள் கடந்துவிட்டன.அவர் கர்ப்பமாக இருக்கலாம், கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது கிம்முடன் உறவு முறிந்திருக்கலாம் என்று ஏராளமான ஊகங்கள் கிளப்பட்டுள்ளது.

கிம் ஜோங் உங்  கின் இளைய சகோதரி  கிம் ஜோ ஜோங் குடன் பிரச்சனை பட்டதால்  முதற்பெண்மணி ரியோ சோல் யு  ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று  கொரியாவின் அரசியலை உன்னிப்பாக அவதானிக்கும் சில புலனாய்வு அமைப்புக்கள் நம்புவதாக பிரிட்டனின் தி இண்டிபெண்டெண்ட் செய்தித்தாள் எழுதியுள்ளது.

“ரியோ சோல் கர்ப்பமாக இருக்கலாம், கடந்த காலங்ககளில்  கிம் ஜோங் கிற்கு எதிராக பல கொலை முயட்சிகள் நடந்தன அதனால் முதற்பெண்மணியை பபாதுகாக்கும்  பொருட்டு அவர் வெளியே வராமல் இருக்கலாம் அல்லது பாரதூரமாக எதுவும் நடந்திருக்கலாம்” என்று டோக்கியோ பல்கலை கழகத்தின் பேராசிரியர்  Toshimitsu Shigemura  கூறுகிறார்.

தனக்கு எதிராக சதி செய்கிறார் என்று கூறி கிம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் சொந்த தாய் மாமனை கொன்று புதைத்தார். தான் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் தூங்கிய குற்றத்திட்காக கடந்த ஆண்டு முக்கிய ராணுவ ஜெனரல் ஒருவர் உயரத்தில் தொங்கவிடப்பட்டு விமானங்களை தாக்கும் ஏவுகணையால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் ரியோ சொல் குறித்து சந்தேகங்கள் வெளியாகி உள்ளன.  என்ன நடந்திருக்கும்.

c80830_4470ec0b485f48d7bd190610f4fbebbc-mv2

Related posts: