ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: 50-வது நாளாக தொடர்கிறது போராட்டம்!

Tuesday, April 3rd, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போராட்டக்குழு சார்பாக தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

Related posts: