ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல்!
Friday, May 27th, 2016
நைஜீரியாவில் ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் தனது அனைத்து கடற்கரையை அண்டிய அலுவலகங்களையும் இந்த அமெரிக்க நிறுவனம் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நைஜர் டெல்டா அவெஞ்சர்ஸ் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு அமைப்பு மின்சாரம் செல்லும் பாதையை தாங்கள் தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. உள்ளுர் வாசிகளும் அங்கு ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த அவெஞ்சர்ஸ் அமைப்பு நைஜர் டெல்டா வாசிகளுக்கு அப்பகுதியின் எண்ணெய் வருவாயில் இருந்து மேலும் கூடுதல் பங்கை பெறுவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய நாட்டின் 70 சதவீத தேசிய வருமானம் டெல்டா பகுதியில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயிலிருந்து வருவதாகும். நைஜீரியாதான் ஆப்ரிகாவின் மிகப் பெரிய பொருளாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீவிரவாதத்தால் ஆப்கான் பள்ளிகளில் இருந்து வெளியேறிய 25 லட்சம் குழந்தைகள்!
தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் மரணம்!
ஜேர்மனியில் கத்தி குத்து - பெண்கள் உட்பட ஆறு பேர் காயம்!
|
|
|


