வேகமாக பரவும் காட்டுத்தீ – ஆஸ்திரேலியாவில் 1000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
Friday, November 30th, 2018
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீயானது நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று காரணமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு நிலவி வரும் மோசமான வானிலையால் இந்த பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் குறித்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related posts:
விமானத்தின் சமிக்ஞைகள் கிடைத்துள்ளன!
காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
டோக்கியோவில் இரு விமானங்கள் மோதி விபத்து!
|
|
|


