வெள்ளை மாளிகை  தகவல் தொடர்பு பணிப்பாளர் இராஜினாமா!

Saturday, March 3rd, 2018

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு இயக்குனராக பணியாற்றி வந்த பெண் ஹோப் கிக்ஸ் திடீரென பதவி விலகி உள்ளார்.

2016-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி பாராளுமன்ற பிரதிநிதித்துவ சபையின் உளவுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழுவின்முன் ஹோப் கிக்ஸ் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள நிலையில், பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மாடல் அழகியான இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதற்கு முன்பிருந்தே அவரிடம் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: