வெளிநாட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் நாடு கடத்தப்படுவர் – கனேடிய அரசு!

Friday, March 3rd, 2017

குடியுரிமை பெறாத வெளிநாட்டினர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால், எந்த நேரத்திலும் நாடு கடத்த கனேடிய அரசிற்கு உரிமை உள்ளது என குடியமர்வு விவகார வழக்கறிஞர் Chantal Desloges தெரிவித்துள்ளார்.

9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட, கனேடிய குடியுரிமை பெறாத நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 59 வயதான Len Van Heest என்பவர், எதிர்வரும் 6ஆம் திகதி நெதர்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊடகமொன்று அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

‘கடந்த கொன்சர்வேட்டிவ் அரசு Bill C-43 என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் விதிப்படி சிறையில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அடைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டினர், அதாவது குடியுரிமை பெறாத வெளிநாட்டினரை எந்த நேரத்திலும் நாடு கடத்த கனடா அரசிற்கு உரிமை உள்ளது.

தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஒருவேளை, இவர் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால், நீண்ட ஆண்டுகள் கனடாவில் வசித்ததை காரணம் காட்டி அவரை கனடாவில் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர் சிறைக்கு சென்றுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்க முடியாது. இது தொடர்பாக மேல் முறையீடுக் கூட செய்ய முடியாது.

கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று மிக நீண்ட ஆண்டுகள் வசித்து வந்தாலும், அவர்கள் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம். இதனை தவிர்க்க வெளிநாட்டினர்கள் உடனடியாக கனடா குடியுரிமையை பெறுவது ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். கனடாவில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் ஒரு வெளிநாட்டினர் வசித்திருந்தால் அவர் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்’. என கூறினார்.

 canada1

Related posts: