வீட்டின் மீது விமானம் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!
Tuesday, February 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யோப்ர லிண்டா நகருக்கு அருகே விமானம் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொருங்கியதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்காவின் மேற்குக்கரைகு வட கொரியா ஏவுகணை தாக்குதல் சோதனை?
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
துருக்கியில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
|
|
|


