வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 13 பேர் உயிரிழப்பு!
Friday, March 23rd, 2018
வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
பஞ்சாப் ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!
தொடர் குண்டு வெடிப்பு - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்பு!
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
|
|
|


