விமான விபத்து: காங்கோவில் 29 பேர் பலி!

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்று 19 பேருடன் பயணித்த சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பேனி நகரை நோக்கி செல்லவிருந்த அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழ்ந்து, நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 18 பேரின் பிரேதங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விமானம் கீழே விழுந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மியான்மரில் மனித உரிமை மீறலா? விசாரணை நடத்திட ஐ.நா கோரிக்கை!
ஆப்கானில் 30 சிவிலியன்கள் ஐ.எஸ் குழுவினரால் கடத்திக் கொலை!
அமெரிக்காவிற்கு சாதகமாக தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றச்சாட்டு!
|
|