விமான விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை!
Thursday, December 8th, 2016
பாகிஸ்தானின் தேசிய விமானச்சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறு என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் 48 பேரும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான விபத்திற்கு முன்னதாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அறிவித்ததாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே-661 ரக விமானம் நாட்டின் வடபகுதியில் உள்ள மலைப்பாங்கான பிரதேசத்தில் நேற்றைய தினம் வீழ்ந்து நொருங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts:
மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தை: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்!
விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!
பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா - இதுவரை 41 ஆயிரம் பேர் பலி!
|
|
|


