விமானம் – ஹெலிகாப்டர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி!

ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.
இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா
வட கொரியா நிலக்கரியை இறக்குமதி செய்ய சீனா தாற்காலிக தடை!
சிரியாவில் உள்ள துருக்கி படையினர் தொடர்பில் எர்டோகன் கருத்து!
|
|