விமானத்தில் திடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Wednesday, July 20th, 2016
சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை 11.40 மணியளவில் 258 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்திலே இந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 258 பயணிகள் உயிர்த்தப்பினர்.இந்த விமானத்தின் கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வரும் நிலையில், கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விடுதலைக்கான வாக்கெடுப்புச் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு!
இரண்டு விமானங்கள் மோதி விபத்து!
பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ - பலர் உடல்கருகிப் பலி!
|
|
|


