அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் பயணம்!

Wednesday, October 25th, 2017

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சென்றடைந்துள்ளார்.

காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம் விமானப்படை தளத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி நிலவவும், தீவிரவாதத்தை வேரறுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசில் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் முதன்முறையாக தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: