கிளர்ச்சியாளர்களை சந்தித்தார் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ரோ!

Saturday, May 13th, 2017

கொலம்பியாவில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள தேசிய விடுதலை இராணுவத்தின் (ELN) தளபதி மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையான FARC யின் தலைவர் ஆகியோரை கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ரோ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தேசிய விடுதலை இராணுவத்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வதன் மூலம் கொலம்பியாவில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியாக ஹவானாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொலம்பியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை இராணுவத்துடனான சந்திப்பை தொடர்ந்து FARC உடனான சந்திப்பு இடம்பெற்றது.கொலம்பிய அரசு மற்றும் மார்க்சிச கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடந்த ஆண்டு சமாதான உடன்படிக்கை எட்டபட்டது. இதன்மூலம் 52 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது

இவ்வாறிருக்க ELN  ஆயுதக்குழு, அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது. இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி புதுப்பிக்கப்படவுள்ளன.கொலம்பிய அரசுடன் ELN, FARC நடத்திய போரின் போது 2 லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதேவேளை மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: