வான் தாக்குதலில் பொதுமக்கள் பாதிப்பு!

Thursday, September 28th, 2017

ஆப்கானிஸ்தான் காபுலில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் பலர் பதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் ஆப்கானிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையில், காபுல் விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகளால் ரொக்கட் தாக்குதல் நடத்தப்படடதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் படையினர் நடத்தும் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தியுள்ளது

இதன்போது பாரிய அளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துல்லியமான புள்ளிவிபரங்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை!

 

Related posts: