வானில் பற்றி எரிந்த விமானம்: சவுதி கால்பந்து வீரர்கள் மயிரிளையில் உயிர் பிழைப்பு!
Tuesday, June 19th, 2018
ரஷ்யாவில் இடம்பெற்று வரும் ஃபிபா உலககிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரில் உருகுவேயுடன் இடம்பெறவுள்ள போட்டிக்காக மொஸ்கோ நகரிலிருந்து ரொஸ்தொவ் நகரிற்கு சவுதி அரேபிய அணி பயணித்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் இறக்கைகளிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரேபிய அணி வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானம் பாதுகாப்பான முறையில் ரொஸ்தொவ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சவுதி அரேபிய விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு, தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!
திரிபோஷாவுக்கு வரிச் சலுகை – அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


