வறுமையில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை சுவிஸில் அதிகரிப்பு!

Wednesday, May 17th, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸ் நாட்டின் புள்ளியியல் துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுவிஸில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 5,70,000 பேர் வறுமையில் உள்ளதாகவும், இது 2014-ம் ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது.

வேலையில்லாமல் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், பிள்ளைகள் இன்றி தனியாக வசிக்கும் பெற்றோர்கள் மற்றும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்களே பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.எனினும், ஐரோப்பிய நாடுகளை விட்டு பிற நாடுகளில் இருந்து வந்து புகலிடம் பெற்றுள்ளவர்களே அதிகளவில் வறுமையில் உள்ளனர்.

சுவிஸ் ஏழைகளை ஒப்பிடுகளையில் இவர்களின் எண்ணிக்கை 11.7 சதவிகிதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டு முதல் அரசு செலவினங்களையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் கட்டுப்பாடு காட்டுவதால் தான் இந்த வறுமை நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகளையில் சுவிட்சர்லாந்து நாட்டில் வறுமையில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 2 சதவிகித அளவிற்கு குறைவாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: