வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வரலாறு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் நிகழ்வுகளே மக்களுக்குத் தொடா்ந்து கற்பிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வரலாற்றைத் தற்போதைய தலைமுறையினர் தெளிவாக உணர்ந்தால் மட்டுமே நாட்டின் மதிப்புகளைப் போற்றிப் பாதுகாக்க முடியும் என நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாரம்பரியம் குறித்து தற்போது அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது என்றும் அதெற்கென விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய இளைய சமுதாயம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் தீவிரமாக உழைத்து வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்
000
Related posts:
மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தை: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்!
இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!
உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட ...
|
|