வரலாற்று படைத்த பராக் ஒபாமா.!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்போதே போரின் நினைவுச் சின்னமான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிரோஷிமாவில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீசப்பட்ட அணுகுண்டினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் குறித்த அதே வருடத்தில் உயிரிழந்தனர்.
இதேவேளை, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பராக் ஒபாமா முதலாவது அணுகுண்டு வீசப்பட்ட பகுதியான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு, அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை புமியோ கிஷிடா ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Related posts:
முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆதரவு!
ஓவர் டைம் வேலைக்கு முடிவுகட்ட ஐப்பானில் புதிய திட்டம்!
பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு - 25 பேர் உடல் சிதறி பலி!
|
|