வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள பவுண்ட்!

Wednesday, October 19th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதை தொடர்ந்து பிரித்தானியாவின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் மதிப்பு 20 வீதமாக குறைந்துள்ள, அதேவேளை, யூரோவுக்கு எதிராக19 வீதமாக குறைந்துள்ளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய மக்கள் இம்முறை சுற்றுலா பயணத்தை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சுற்றுலா பயணம் மேற்கொள்வதன் மூலம் அதிகளவான பவுண்ட்களை செலவு செய்ய நேரிடும் என பிரித்தானிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 150,000 பிரித்தானியர்கள் நியூயோர்க் செல்வும், அதேவேளை, பாடசாலை விடுமுறையை முன்னிட்டு 300,000 பேர் Canary தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வார்கள்.

எனினும், அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மதிப்பு பாரிய விலை சரிவை சந்தித்துள்ளதனால் தமது, வாழ்வாதாரம் கருதி இதுபோன்ற சுற்றுலா பயணங்களை பிரித்தானிய மக்கள் புறக்கணித்துள்ளனர்.

800x480_IMAGE54770915

Related posts: