வட கொரியா செயற்கை கோள் திட்டம்?
Tuesday, September 20th, 2016
புதிய, அதிக சக்தி வாய்ந்த ஏவூர்தியின் தரை சோதனையை நிறைவேற்றி இருப்பதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது.
இந்த புதிய ஏவூர்தி பலவகையான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு உதவும் என்று அரசின் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த சோதனை வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னின் மேற்பார்வையோடு நடைபெற்றுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியா ஐநாவின் தடைகளை மீறி 5-வது அணுகுண்டு சோதனையை நடத்தியதோடு, பல ஏவுகணைகளையும் செலுத்தி சோதனை செய்தது.
இதனுடைய செயற்கை கோள் செலுத்தும் திட்டம், பெலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதை மறைப்பதற்கான ஒரு யுக்தியாக பரவலாக பார்க்கப்படுகிறது.

Related posts:
துப்பாக்கி சூடு: மெக்சிகோவில் 4 பேர் பலி!
கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு - உலக சுகாதார நிறுவனம்!
பாடசாலையில் துப்பாக்கி சூடு - எட்டு மாணவர்கள் உயிரிழப்பு!
|
|
|


