வட கொரியாவுக்கு மேலும் தடைகள்!

வட கொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதன் மீதான தடைகளை ஐ.நாவின் பாதுகாப்பு சபை மேலும் கடுமையாக்கியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான நிலக்கரியை 60 சதவீத அளவிற்கு குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளன.
தாமிரம் உள்ளிட்ட பிற கனிம ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது.வட கொரியா, செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை நடத்தியது, அதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த நிலையில், கூடுதல் தடைகளை விதிக்கும் முயற்சிகள் நகைச்சுவைக்குரியது என்று வட கொரிய அரசு அதனை நிராகரித்தது.
Related posts:
இந்தியாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் !
தீப்பற்றி எரிந்த பேருந்து: 30 பேர் படுகாயம்!
இந்தியாவில் வெடிவிபத்து: 20க்கும் ஆதிகமானோர் பலி!
|
|