வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!

ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
துமென் நதியின் அருகில் அமைந்திருக்கும் ஹோர்யோங் நகரை சேர்ந்தவர்கள்தான் காணாமல் போயிருப்பதாக தேசிய செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது,
வட கொரியா, ரஷியா மற்றும் சீனாவின் எல்லையை ஒட்டி ஓடுகின்ற இந்த நதியின் கரைகள் வெள்ளிக்கிழமை உடைப்பெடுத்து, வட கெரிய எல்லைக்குள் அதிக சேதங்களை ஏற்படுத்தின.
பருவகால மழையும் வேகமான காற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 17 ஆயிரத்திற்கு மேலான வீடுகளை அழித்திருக்கின்றன.
Related posts:
இரண்டு வருடங்களில் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு சவுதி?
மற்றும் ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!
|
|