வட கொரியாவில் இருந்து தப்பித்த இராணுவ வீரரின் வயிற்றில் புழுக்கள்!

வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பி சென்றபோது சுடப்பட்ட இராணுவ அதிகாரியின் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீரரின் உடல் நிலை தற்போது நல்ல நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த அளவு புழுக்களை தமது 20 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை என்கிறார் தென் கொரிய மருத்துவரான லீ குக்-ஜாங்.நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்டதில் மிக நீளமான புழு 27 செ.மீ. நீளமானது.
மாசடைந்த உணவை உட்கொள்வதன் வாயிலாகவோ, ஒரு பூச்சி கடிப்பதன் வாயிலாகவோ, தோலின் வழியாக ஓர் ஒட்டுண்ணி உள்ளே நுழைவதாலோ மனித உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் உண்டாகின்றன.வட கொரியாவில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இவரது உடல்நிலையே நமக்கு காட்டுகிறது என லீ குக் ஜாங் கூறியுள்ளார்.
Related posts:
|
|