வடகொரியா மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – டொனால்ட் ட்ரம்ப்!
Thursday, February 16th, 2017
சர்வதேசத்தின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த கருத்தை அவர், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுடன் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப் –
“வடகொரியா எம் அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆரம்பத்திலிருந்து மிகப் பெரிய தவறுகளை வடகொரியா செய்து வருகின்றது. அது தொடர்பில் நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜொங்கின் (Kim Jong-un) மேற்பார்வையின் கீழ் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ஏவுகணை ஒன்று நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே ட்ரம்ப் மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜஸ்ரின் ரூடோ, “மற்றொரு நாடு அதனது கொள்கைகளை எவ்வாறு வகுக்க வேண்டும் என்பது தொடர்பில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன். ஏனெனில் கனேடியர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்றுவதே எனது கடமை” என தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


