வடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்!

Tuesday, July 3rd, 2018

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ நாளை மறுதினம் வடகொரியா செல்ல உள்ளார்.

அவர் இதன்போது வடகொரிய தலைவரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும், வடகொரியா தலைவர் கிம் ஜோங் அன்குனுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

அதன்போது, அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இதனை தொடர்ந்து வடகொரிய தலைவர், தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார். இந்த நிலையிலேயே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ வடகொரியா சென்று, கிம் கிம் ஜோங் அன்னை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related posts: