வடகொரியாவுடன் பேச்சு கிடையாது – டிரம்ப்!

வடகொரியாவுடன் இனி பேச்சுக்கள் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஜப்பான் மீது ஏவுகணையை பறக்கவிட்டு, பசுபிக் பெருங்கடலில் விழச் செய்து சோதனை நடத்தியது.இந்த ஏவுகணை அணுஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்கும் திறனுடையது என்றும், அதுமட்டுமின்றி இந்த ஏவுகணை சோதனை குவாம் தீவு மீது தாக்குதல் நடத்துவதற்காக சோதனை செய்யப்பட்டது என்று தகவல்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில், வடகொரியாவிடம் இனி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது என்றும் 25 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தாச்சு இனியும் பொறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
Related posts:
அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி!
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி - நேற்றுமுன்தின...
காலநிலை மாற்றம் மோதலால் 3 மில்லியன் எத்தியோப்பியர்கள் பாதிப்பு - அந்நாட்டின் தலைவர் கிறிஸ் நிகோய் த...
|
|