வங்கதேச தொழிற்சாலையில் தீ : 23 பேர் பலி!
Saturday, September 10th, 2016
வங்கதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தீயை கட்டுப்படுத்த அவசர உதவி பணியாளர்கள் இன்னும் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது, அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவின் வடக்கே, டோங்கி என்ற பகுதியில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் வெடித்ததை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் சிலர்உயிரிழந்துள்ளனர்.
வங்கதேச பொருளாதாரத்தில் ஏற்றுமதி உற்பத்தி என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், சமீபத்தில் பல பேரழிவுகள் அங்கு ஏற்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.

Related posts:
முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்! அறிக்கை வெளியிட்ட அப்பலோ!!
500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா வின் அங்கத்துவ நாடுகள் கண்டனம்!
|
|
|


