லெபானான் அலுவலகத்தை மூடியது அல் அரேபியா தொலைக்காட்சி!

சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான அல் அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் தனது நிலையத்தை மூடியுள்ளது.
சவூதிக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தனது ஊழியர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அல் அரேபியா தெரிவித்திருக்கிறது.
லெபனானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான ஹெஸ்புல்லாவுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து சவூதி அரசு சமீபத்தில் தனது ஏமாற்றத்தை பதிவுசெய்திருந்தது. ஷியா இஸ்லாமியக் குழுவான ஹெஸ்புல்லா சவூதி அரேபியாவின் பிராந்திய எதிரியான ஈரானுக்கு நெருக்கமாக அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்!
உணவகத்தில் வெடிவிபத்து – ஜப்பானில் 42 பேர் படுகாயம்!
பாகிஸ்தானுடன் இந்தியா ஆடித்தான் ஆக வேண்டும் - ஐசிசி அதிரடி!
|
|