லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!
Thursday, September 21st, 2017
இலண்டன் மத்திய பகுதியிலுள்ள லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இன்றையதினம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு பொதி காணப்பட்டதனையடுத்து இலண்டன், லிவர்பூல் வீதி மற்றும் மோர்கோட் பகுதிகளிலிருந்த பொதுமக்கள் காவல்துறையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வீதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் மோப்ப நாய்கள் சகிதம் ஆயுதமேந்திய காவல்துறையினர் மற்றும் வெடிமருந்து அணிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் குண்டு செயலிக்க வைக்கும் அணியினரும் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தெற்கு சூடானில் மோதல்!
அகற்றப்படுகிறது வடகொரியாவின் அணு சோதனை மையம்!
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடன் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான்...
|
|
|


