தெற்கு சூடானில் மோதல்!

Sunday, August 14th, 2016

தெற்கு சூடானில் எதிரணி பிரிவுகளுக்கு இடையில் மோதல்கள் நடைபெற்றிருப்பதாக அறிக்கைகள் வந்துள்ளன.

தலைநகர் ஜூபாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த யெய் நகரில், கடும் துப்பாக்கி சண்டைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்திருக்கின்றனர்

அரசப் படைப்பிரிவுகள் சனிக்கிழமை தங்களுடைய நிலைகளை தாக்கியதாக துணை ஜனாதிபதி ரெய்க் மச்சாருக்கு விசுவாசமான படைப்பிரிவுகள் கூறியிருக்கின்றன. உயிரிழந்தோர் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை இல்லை. ஜனாதிபதி சால்வா கீர் மற்றும் துணை அதிபர் ரெய்ன் மச்சார் இருவருக்கும் விசுவாசமான படைப்பிரிவுகளுக்கு இடையில் கடந்த மாதம் ஜூபாவில் மோதல்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம், ஐக்கிய நாடுகள் சபை மேலும் 4 ஆயிரம் அமைதி காப்பு படையினரை பரவலாக்குவதை அனுமதிக்க தூண்டியது. ஐ.நாவுடனான ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்தி கொள்வதாகவும், ஐநா தன்னுடைய நாட்டை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க போவதில்லை என்றும் சால்வா கீர் தெரிவித்திருக்கிறார்.

Related posts: