லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120பேர் பலி!

Friday, April 23rd, 2021

லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே உயிரிழந்துள்ளனர்.

லிபிய கடற்பரப்பில் ரப்பர் படகு கவிழ்ந்ததில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

130 பேர் பயணித்த படகுகளே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன, பலரின் உடல்கள் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவின் சர்வதேச கடற்பரப்பில் மூன்று படகுகள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கப்பல்கள் உயிருடன் எவரையும் காணவில்லை பத்து உடல்களை மாத்திரம் காணமுடிந்ததுஎன தெரிவித்துள்ளன.

Related posts: