லிபியாவில் பிரித்தானிய தலையீடு குறித்து கடும் விமர்சனம்!

Wednesday, September 14th, 2016

லிபியாவின் உள்விவகாரங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் பிரான்ஸும் தலையிட்டதை, பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவொன்றின் அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.

பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிகோலா சர்கோசி பகுதியளவில் சுயநலத்தின் காரணமாக, கர்ணல் கடாஃபி மீது இராணுவ நடவடிக்கை எடுக்க உந்தப்பட்டார் என பிரிட்டனின் வெளியுறவுக்கான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை கூறுகிறது.

பென்காசி நகரில் பொதுமக்களை காக்கும் நோக்கில் அப்போது வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.லிபியா தொடர்பில் சீராவும் தொடர்ச்சியாவும் செயல்படும் வகையிலான உத்தியை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன் முன்னெடுக்க தவறிவிட்டார் எனவும் அந்தக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

மோசமான புலனாய்வு, பழங்குடியின மக்களிடையே நிலவும் விரோதங்கள் குறித்த தெளிவில்லாத மிகக்குறைந்த புரிதல் ஆகியவை உள்நாட்டில் மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தன என அந்த அறிக்கை கூறுகிறது.

இதன் காரணமாக குடியேறிகள் சந்திக்கும் நெருக்கடிகள், ஆயுதப் பரவல் மற்றும் இஸ்லாமிய அரசு எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு வளர்ந்து விரிவடைவந்தது ஆகியவை இடம்பெற்றன என பிரிட்டிஷ் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் அறிக்கை சாடியுள்ளது.

ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளரோ, லிபியாவில் தமது தலையீட்டை அரபு லீக் மற்றும் ஐ நா ஆகியவை ஆதரித்தன எனத் தெரிவித்துள்ளார்.

1-1

Related posts: