லண்டன் நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடர்ந்த துபாய் அரசர்!

Friday, July 5th, 2019

துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜோர்டானின் மறைந்த மன்னர் ஹுசைனின் மகள் இளவரசி ஹயா, தனது கணவர் ஷேக் முகமது பின் ரஷீத்தை விட்டு துபாயிலிருந்து லண்டனுக்கு பயணம் செய்ததாக பிரித்தானிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நபராக அறியப்படுபவர். பிரித்தானிய சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்தவர்.

ஆக்ஸ்போர்டில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற ஹயா, கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனில் தலைமறைவானார்.

அவர் மீது துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத், லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தின் குடும்பப் பிரிவில் விசாரணைக்கு வருகிறது. அடுத்த விசாரணைகள் ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: