ராம்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சுவாதி கொலை வழக்கு குற்றவாளியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18–ந்தேதி அன்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். புழல் மத்திய சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து, மின்சாரத்தை உடலில் பாய்ச்சி நூதனமான முறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.
ராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் அரசு டாக்டர்களுடன், தனியார் மருத்துவமனை டாக்டரும் பங்கேற்க வேண்டும், என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி, அரசு டாக்டர்கள் 4 பேர் குழுவுடன் சேர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்தினார். இதற்காக அவர் இன்று சென்னை வந்தார்.சென்னை மருத்துவர்கள் மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், செல்வகுமார், வினோத், மணிகண்டன் ராஜா இடம்பெற்று இருந்தனர். மேஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில் ஒப்புதல் கடிதத்ததில் ராம்குமார் தந்தை கையெழுத்திட்டார் இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனையானது வீடியோ பதிவு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் ராம்குமாரின் உடலானது அவரது தந்தை பரமசிவத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து ராம்குமாரின் இறுதி சடங்கானது அவரது சொந்த ஊரில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related posts:
|
|