ஏமனில் போர் குற்றப் புலனாய்வை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் கோரிக்கை!

Tuesday, October 11th, 2016

கடந்த பத்து நாட்களில் 370 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏமனில் பொது மக்கள் பலியாவதில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், செய்த் ராத் அல்ஹுசேன் தெரிவித்திருக்கிறார்.

போர் குற்றம் நடந்திருக்கும் சாத்தியக்கூறு தொடர்பாக சர்வதேச புலனாய்வு நடத்த வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை மீண்டும் அவர் விடுத்திருக்கிறார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் தலைநகர் சானாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வின் போது நடத்திய வான்வழி தாக்குதல் மூலம் 140 பேரை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சௌதி அரேபியாவுக்கு எதிராக சானாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

ஏமனில் நடைபெற்றுள்ள துஷ்பிரயோகங்கள் குறித்து பக்கசார்பற்ற விசாரணையை அமைப்பதற்கு தவறி இருப்பதன் மூலம், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலை சேர்ந்த நாடுகள் ஏமனில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல் போகும் சூழல் உருவாக பங்காற்றி உள்ளன என்று அல் ஹுசேன் கூறியிருக்கிறார்.

_91754225_03d7e4fe-b58b-46ff-8255-c72227847975

Related posts: