ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!

தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் நேற்று இவ்வாறு கடல் உள்வாங்கியிருந்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் கடலில் யாரும் நீராட வேண்டாம் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் நேற்று ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் கடல் உள்வாங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்திருந்தாக தமிழக செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாலியில் தேர்தல்!
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றும் உயர்மட்ட பேச்சு!
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
|
|