ரஷ்ய தூதுவருடன் ட்ரம்பின் மருமகன் இரகசிய தொடர்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் நெருங்கிய ஆலோசகருமாகிய ஜெரட் குஷ்னர் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவருடன் இரகசிய தொடர்பாடலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின்போதும் அதற்கு பின்னரும் என குறைந்தபட்சம் மூன்றுமுறை இவ்வாறு முன்னறிவிப்பில்லாது இரகசிய தொடர்பு கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட மேற்படி தொடர்பாடல்களில் இரண்டு தொலைபேசியூடான தொடர்பாடல் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க தேர்தல் பிரசார காலத்தின்போது ட்ரம்புக்கும் கிரெம்ளினுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததா இல்லையா என்ற விசாரணைகளின் அடிப்படையில் ஜெரட் குஷ்னர் மீதும் மத்திய புலன் விசாரணை ஆணையக அதிகாரிகளின் பார்வை திசைதிரும்பியுள்ளது. இந்நிலையில் மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Related posts:
|
|