ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
Friday, February 10th, 2017
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) க்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை காரணமாக எதிர்வரும் ஆண்டு ரஸ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி புட்டினை எதிர்த்து போட்டியிட முடியாத நிலைம அலெக்ஸி நவால்னிக்கு ஏற்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டதாக ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் நவால்னி தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக நவால்னி கருதப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு குற்றம் சுமத்தி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை அரசியல் சதித் திட்டம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Related posts:
வேலைக்கு செல்லாத அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள்: ஜேர்மன்
மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது!
சோதனை வெற்றி: கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி அறிவிப்பு!
|
|
|


