ரஷ்ய இராணுவ விமானம் சிரியாவில் விபத்து!
Thursday, March 8th, 2018
ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தோரில் பணியாளர்கள் 6 பேர் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்து சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான தளத்தில், விமானம் இறங்க முற்பட்டபோது ஏற்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்திற்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறே தவிர விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
Related posts:
10 நாளில் சுவாதி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்!
இத்தாலிக் கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!
பிரான்ஸ் திரையரங்கில் மோதல்: பல லட்சம் ரூபாய் நஷ்டம்?
|
|
|


