ரஷ்யா – யுக்ரைன் பதற்றம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதம்!

கிரைமியாவில் ரஷியாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த புதன்கிழமையன்று, இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட கிரைமியாவில் திடீர் ஆக்கிரமிப்பு செய்ததாக யுக்ரைன் மீது மாஸ்கோ புகார் கூறியதையடுத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
யுக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, கிரைமியாவுடனான நடைமுறையில் உள்ள எல்லை மற்றும் போராளிகளின் பிடியில் இருக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவத்தை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் புதின் நிலம், கடல் மற்றும் வான் வழியான கிரைமியாவின் பாதுகாப்பை அதிகப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். யுக்ரைன் அரசு தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது மேலும் அமெரிக்காவும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
Related posts:
பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரித்தானியா குற்றவியல் விசாரணை!
சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை: புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்!
வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !
|
|