ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியது அமெரிக்கா!

Tuesday, October 4th, 2016

அமெரிக்காவும் ரஷ்யாவும் சிரியா போர் தொடர்பாக கடந்த மாதம் எட்டிய போர்நிறுத்தம் முறிவடைந்துள்ள நிலையில் அது பற்றி ரஷ்யாவோடு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது.

அதனுடைய சிரியா அரசு கூட்டணியினரை இந்த ஒப்பந்தத்தின்படி செயல்பட செய்ய ரஷ்யா தோல்வியடைந்துள்ளது என்றும், ரஷ்யாவும், சிரியாவும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்திருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா பேச்சுவார்த்தைப்படி தனது பக்கம் செய்ய வேண்டியதை அலட்சியப்படுத்திய பிறகு, குற்றப்பழியை தங்கள் மீது திருப்பியிருப்பதாக ரஷ்ய வெளியறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.

இந்நிலையில், இவ்விரு நாடுகளின் ஆயுதத் தர புளூட்டோனியத்தை அணு எரிபொருளாக மாற்றுவது தொடர்பான நீண்டகால இருதரப்பு ஒப்பந்தத்தின் ரஷ்ய செயல்பாட்டை அதிபர் விளாடிமிர் புதின் இடைநிறுத்தியிருக்கிறார்.ரஷ்யா, யுக்ரைனில் தலையிட்டதை தொடர்ந்து, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா நீக்கினால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாம் என்று அவர் குறிப்புணர்த்தி இருக்கிறார்.

இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்திருக்கிறார்.

_91509719_3d4a9945-31e9-4c2a-a2c1-d315bf333871

Related posts: