ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது – அமெரிக்கா தெரிவிப்பு!

Monday, March 13th, 2023

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப் போகிறது என அமெரிக்கா நினைக்கவில்லை.

உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனின் எதிர்வரும் விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் சபையில் ரஷ்யா-உக்ரைன் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகிய 32 நாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த லு, ரஷ்யாவுடன், மத்திய ஆசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு நீண்ட, சிக்கலான உறவுகள் இருப்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அவர்கள் எந்த நேரத்திலும் அந்த உறவுகளை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இந்த மோதலில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கு பற்றி நாங்கள் அவர்களிடம் பேசுகிறோம் என்றார்.

ஐநா சாசனத்தின் கொள்கைகளுக்கு இணங்க உக்ரைனில் விரிவான, நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான அவசரத்தை வலியுறுத்தும் ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியிருந்தது.

எனினும், ஐ.நா சாசனத்தின் மதிப்பின் கொள்கைகளை வரையறுக்க உலகம் ஒன்றிணைவது முக்கியம் என்று அவர் கூறினார்.

‘நாங்கள் உக்ரைனில் ஒவ்வொரு நாளும் அணுகுமுறையைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் இந்த மோதல் முடிவடையும் வரையில் ஐ.நா. சாசனத்தில் உள்ள கொள்கைகளின் அடிப்படையில் முடிவடையும் இலக்கை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: