ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே ஏற்பட்ட இந்நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை
Related posts:
சிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி!
யுத்த நிறுத்தத்தில் காஸாவில் தாக்குதல்!
சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு - ஜோர்ஜியா ஆர்ப்பாட்டத்தில் மோதல்!
|
|