ரஷ்யாவின் 35 இராஜதந்திரிகளும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!
Tuesday, January 3rd, 2017
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட 35 ரஷ்ய இராஜதந்திரிகளும் அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிய விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டதாக தூதரக அதிகாரி ஒருவர் நேற்று குறிப்பிட்டார். 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளின்டன் பிரசாரம் மற்றும் ஜனநாயக கட்சியின் கணனிகளில் ஊடுருவியதாக குற்றம் சாட்டியே அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற ஒபாமா உத்தரவிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி மற்றும் ஏனைய அரச அதிகாரிகளை ஏற்றிச்செல்லும் சிறப்பு விமானத்தின் மூலமே புத்தாண்டு தினத்தில் மேற்படி இராஜதந்திரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறியதாக ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய இராஜதந்திரிகள் 72 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி ஒபாமா உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்காவுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இது ஒரு கீழ்தரமான இராஜதந்திரம் என்றும் அவர் சூசகமாக கூறியிருந்தார். புடினின் முடிவு புத்திசாலித்தனமானது என்று டிரம்ப் பாராட்டினார்.

Related posts:
|
|
|


